கணினி திரை பெரியதாக இருந்தால், இரண்டு பயன்பாட்டு சாளரங்களையும் அருகருகாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பொதுவான 17", 15" திரைகளில் இரண்டை நமது கணினியுடன் இணைத்து பயன்படுத்துவது, மென்பொருள் உருவாக்குபவர்களின் செயல்திறனை உயர்த்துகிறது என்று கண்டிருக்கிறார்கள்.
ஆங்கில விக்கிபீடியா கட்டுரையிலிருந்து
“A multiple monitor setup increases the net display area of a system and can be an inexpensive way of improving computer usage.[6] Resulting display area after upgrading to a multi-monitor configuration is limited by the size, resolution and number of monitors.”
2. மடிக்கணினி ஒன்றுடன் வெளித்திரையை இணைத்தால், மடிக்கணினித் திரையில் தெரியும் அதே பயன்பாடுதான் வெளித்திரையிலும் தெரியும். திரையில் படக்காட்சிகள் காண்பிப்பதற்கு இந்த கொடாநிலை அமைப்பு தேவையான ஒன்று.ஆனால் மேலே சொன்ன இரட்டை பயன்பாடு முறைக்கு, வேறு அமைப்பு வேண்டும்.
3. நான் இப்போது பயன்படுத்தி வரும் இயங்கு தளம் குபுண்டு 9.1 (Kubuntu). அதில் இரட்டைத் திரைகளை வடிவமைப்பது எப்படி என்று இரண்டு நாளாக இணையத்தில் தேடி, கடைசியில் எளிய சில மாற்றங்களில் வேலை ஆகி விட்டது.
4. இந்த சுட்டியில் இருக்கும் வழிகளைப் பின்பற்றி இரட்டைத் திரைகளை அமைத்துக் கொண்டேன்.
1. /etc/X11/xorg.conf கோப்பில் Screen பிரிவில் பின்வரும் வரிகளை சேர்க்கவும். (கோப்பை மாற்றும் முன்பு ஒரு நகல் எடுத்து வைத்துக் கொண்டால் ஏதாவது தவறாகப் போனால், பழைய நிலைக்கு எளிதாக மாறிக் கொள்ளலாம்)
DefaultDepth 24
SubSection “Display”
Modes “1680×1050″ “1280×800″
Virtual 2048 768
EndSubSection
2. கன்சோல் பயன்பாட்டிலிருந்து கீழ்க் கண்ட கட்டளையை இயக்க வேண்டும்xrandr –output LVDS –mode 1024×768 –output VGA-0 –mode 1024×768 –right-of LVDS
LVDS மடிக்கணினித் திரை
VGA-0 வெளித் திரை
1024x768 என்பது திரையின் அளவு.
இந்தக் கையேட்டில் முழு விபரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக