- வேலூரில் தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்குத் தேவையான மூன்று அடிப்படை காரணிகள் - மனித வளம், கட்டமைப்பு வசதிகள், செயல்திட்டம்
a. தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரியும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவலை திரட்டித் தொகுக்க வேண்டும்.
b. மாவட்டத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் படிக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை தொகுத்து பராமரிக்க வேண்டும்.
- வேலூர் மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பத் துறைக்கான 20 ஆண்டு தொலைநோக்குத் திட்டம் ஒன்றை தயாரித்து செயல்படுத்த வேண்டும்.
a. பெருநகரங்களில் இருக்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் வேலூருக்கு வர வைக்கலாம்.
b. நகரத்தில் ஒரு தகவல் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஏற்படுத்த வேண்டும்.
- தகவல் தொழில் நுட்ப மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். விஐடி இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
a. வேலூரில் அலுவலகம் ஏற்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் ஆரம்ப அலுவலக வசதி, வழிகாட்டல் சேவைகள் கிடைக்க வேண்டும்.
b. மாவட்டத்தில் செயல்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு பொது அமைப்பு இருக்க வேண்டும்.
c. அரசாங்கத் திட்டங்களை தொழில் முனைவோருக்குக் கொண்டு சேர்க்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.
- வேலூர் மாவட்டத்தின் சிறப்புப் பண்புகளை அடையாளம் கண்டு அதன் மூலம் நிறுவனங்களை ஈர்க்கலாம்.
a. வேலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தகவல் தொழில் நுட்பச் சேவைகள் வழங்கும் வாய்ப்புகளை அடையாளம் காண வேண்டும். தோல் துறை நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.
b. சிறிய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் 500 சிறு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல் திட்டம் வகுக்கலாம்.
c. சிறு நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்த வேண்டும்.
- அரசு கொள்கைகள் ஆதரவும் ஊக்குவிப்பும் அளிப்பவையாக இருக்க வேண்டும்.
a. சிறு நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போடுவதற்க அரசு அங்கீகாரம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
b. மாவட்ட தொழில் மையத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்று ஏற்படுத்தி வசதிகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டும்.
c. வேலூர் நகராட்சி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க சேவை மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் (விஐடியின் நிறுவன உருவாக்கச் சேவையைப் போன்று)
ஆங்கிலத்தில்
Recommendations of panel on Vellore as IT destination.
1. Three necessary factors to enable IT sector in Vellore
a. Human Resources
b. Physical Infrastructure
c. Action plan
Collect and compile database of professionals from Vellore district working in different parts of the world.
Prepare a database of Engineering colleges in the district and maintain details of students studying and passing out each year.
2. Prepare a 20 years vision document for IT sector in the district.
a. Encourage Tier II units of companies operating in larger cities to locate in Vellore
b. Establish an IT SEZ in the city.
3. Set up a IT facilities center to help companies looking to establish base in Vellore. VIT can play a major role in this.
a. Soft landing option for companies by providing office infrastructure and initial guidance for setting up base here.
b. A forum for IT companies in the district to meet and discuss development issues
c. Co-ordinating with government departments to make funds available to entrepreneurs.
4. Identify unique selling points of Vellore district to promote as an IT destination.
a. Information Technology needs of industry in the district should be identified and served. Leather sector, Self Help Groups, Educational Institutions can be the target markets
b. Focus on encouraging and facilitating small companies. Set a target of setting up 500 small companies in the city in 5 years time.
c. Set up the IT SEZ targetting small and medium companies.
5. A supportive and encouraging government policy is to be prepared and implemented.
a. Provide recognition to small companies to enable them compete globally.
b. Create an IT division in the District Industrial Center to provide guidance and support with available schemes
c. Encourage new initiatives in the sector through industry forums.
d. Establish a technology business incubation center by the municipal government (similar to VIT technology incubator)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக