microsoft - மைக்ரோசாப்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
microsoft - மைக்ரோசாப்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜூலை, 2012

பில் கேட்ஸின் தான தருமங்கள் - ஒரு விமர்சன பார்வை


"பில் கேட்ஸ் கணினி துறையில் தொழில் ரீதியாக சில கஷ்டங்களை கொடுத்தாலும் அவரது தான தருமங்களால் அவை அனைத்துக்கும் ஈடு கட்டி விடுகிறார் என்பதுதான் ஸ்லாஷ்டாட்டில் பொதுவான கருத்தாக இருக்கிறது. அவரது தரும காரியங்கள் சுயநலமற்றவை என்று சொல்ல முடியாது. வழக்கமாக கேட்ஸூக்கு ஆதரவான எட்வீக், கேட்ஸின் அறக்கட்டளையின் செயல்பாடுகளை பற்றியும் பலன் பெறுபவர்கள் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியடையாதது பற்றியும் ஒரு கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது"

ஸ்லாஷ்டாட் விவாதம்

புதன், 4 ஜூலை, 2012

பில் கேட்ஸ் : பாரம்பரிய மேசைக் கணினி மாறி விட்டது


சார்லி ரோஸூடனான நேர்முகத்தில் பில் கேட்ஸ் விண்டோஸ்-8 இடைமுகத்தை மெட்ரோ மயமாக்குவதை ஆதரித்து பேசினார். குளிகைக் கணினியில் பயன்படுவதை இலக்காக வைத்திருப்பதை அவர் நியாயப்படுத்தினார். (வீடியோ சுட்டி - குளிகை கணினி பற்றிய பேச்சு 28வது நிமிடத்தில் ஆரம்பமாகிறது). பாரம்பரிய மேசைக்கணினி பயனர்கள் என்ன சொல்வார்கள் என்று கேட்ட போது, உலகமே குளிகை கணினிகளுக்கு மாறிக் கொண்டிருப்பதாக அவர் கருத்து தெரிவித்தார். ஒரு புதிய கணினியில் இரண்டு பயன்பாட்டு அனுபவங்களும் ஒருங்கிணைந்திருக்க வேண்டும்.

போட்டியாளர்களுக்கு விண்டோஸ் 8ஐ விலைக்கு விற்கும் அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் கருவியை உற்பத்தி செய்வதையும் அவர் நியாயப்படுத்தினார். பயனர்கள் மைக்ரோசாப்டின் கருவி அல்லது மற்ற நிறுவனங்களின் கருவியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இது மேசைக்கணினி இறந்து கொண்டிருப்பதன் அறிகுறியா? கேட்ஸ் பாரம்பரிய மேசைக்கணினியின் எதிர்காலம் பற்றிய கேள்விகளை தவிர்த்தார். கடந்த காலங்களில் அவர் முன் வைத்த நிலைப்பாட்டிலிருந்து இது பெரிய விலகல் ஆகும். 


ஸ்லாஷ்டாட் விவாதம்

செவ்வாய், 26 ஜூன், 2012

மைக்ரோசாப்ட் சர்பேஸ் - கணினி நிறுவனங்கள் அதிர்ச்சி


"மைக்ரோசாப்டின் சர்பேஸ் கணினி ஐபேடின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சியும் சொந்தமாக வடிவமைக்கும்   முயற்சியும் மட்டுமல்ல. 
பல ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் கூட்டாளிகளாக இருந்து மேசைக் கணினி ஒரு விலை உயர்ந்த பொருள் என்ற நினைப்பை தகர்த்த கணினி நிறுவனங்களுக்கு அது ஒரு மிரட்டலாக வெளியாகியிருக்கிறது. இந்த பகைமையின் வேர்கள் ஆழமாக இருக்கின்றன. மைக்ரோசாப்டு தனது கூட்டாளிகளுக்கு சர்பேஸ் பற்றிய விபரங்களை அது வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் தெரிவித்தது. அப்போதும் குறைந்த பட்ச விபரங்களைத்தான் தெரிவித்தது. பெரிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் நேரடி தொலைபேசி அழைப்பு வந்தது. 
உலக அளவில் 4வது 5வது கணினி நிறுவனங்களான ஆசுஸ், ஏசர் இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கு சர்பேஸ் போல ஒன்று வருவதைப் பற்றிய தகவலே இல்லை என்கிறார்கள். பல ஆண்டுகளாக ரெட்மாண்டுடன் நெருக்கமாக ஆடிக் கொண்டிருந்த இந்த கணினி நிறுவனங்களுக்கு இது மிகவும் கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. "

(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன).