"மைக்ரோசாப்டின் சர்பேஸ் கணினி ஐபேடின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சியும் சொந்தமாக வடிவமைக்கும் முயற்சியும் மட்டுமல்ல.
பல ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் கூட்டாளிகளாக இருந்து மேசைக் கணினி ஒரு விலை உயர்ந்த பொருள் என்ற நினைப்பை தகர்த்த கணினி நிறுவனங்களுக்கு அது ஒரு மிரட்டலாக வெளியாகியிருக்கிறது. இந்த பகைமையின் வேர்கள் ஆழமாக இருக்கின்றன. மைக்ரோசாப்டு தனது கூட்டாளிகளுக்கு சர்பேஸ் பற்றிய விபரங்களை அது வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் தெரிவித்தது. அப்போதும் குறைந்த பட்ச விபரங்களைத்தான் தெரிவித்தது. பெரிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் நேரடி தொலைபேசி அழைப்பு வந்தது.
உலக அளவில் 4வது 5வது கணினி நிறுவனங்களான ஆசுஸ், ஏசர் இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கு சர்பேஸ் போல ஒன்று வருவதைப் பற்றிய தகவலே இல்லை என்கிறார்கள். பல ஆண்டுகளாக ரெட்மாண்டுடன் நெருக்கமாக ஆடிக் கொண்டிருந்த இந்த கணினி நிறுவனங்களுக்கு இது மிகவும் கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. "
(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள் நடக்கின்றன).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக