லினக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கி பராமரிக்கும் லினஸ் தோர்வால்ட்ஸ் லினக்ஸில் அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் என்வீடியாவின் பங்களிப்பை குறை கூறி தாக்கினார்.
"லினக்ஸ் இயங்கு தளத்தில் அவரது பங்களிப்புக்காக வழங்கப்பட்ட ஆயிரமாண்டு பரிசை பெற்றுக் கொள்வதற்காக பின்லாந்து போயிருந்த லினஸ் தோர்வால்ட்ஸூடன் ஆல்டோ பல்கலைக் கழகம் ஒரு உரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
கேள்வி நேரத்தின் போது ஒருவர் லினக்சில் 'என்வீடியா ஏன் சரியாக வேலை செய்வதில்லை' என்று கேட்டார். 'லினக்ஸ் உருவாக்கத்தில் பங்குபெறும் நிறுவனங்களில் மிக மோசமானவற்றில் ஒன்று என்வீடியா' என்று லினஸ் கருத்து சொன்னார். ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு (அவற்றின் உள்ளே இருப்பது லினக்ஸ்தான்) என்வீடியா பெரும் எண்ணிக்கையிலான சிப்புகளை வழங்குவது நிலவரத்தை இன்னும் மோசமாக்குகிறது.
லினக்சில் என்வீடியா இயக்கிகளைப் பற்றி உங்கள் அனுபவம் என்ன?"
இப்படி ஒரு செய்தி ஜூன் 17ம் தேதி ஸ்லாஷ்டாட்டில் விவாதிக்கப்பட்டது.
ஜூன் 20ம் தேதி என்வீடியா நிறுவனம் லினஸ் டோர்வால்ட்சுக்கு பதில் சொல்கிறது.
"என்வீடியாவின் மக்கள் தொடர்பு பிரிவு லினஸ் டோர்வால்ட்சின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தான் சேர்ந்து பணியாற்றிய நிறுவனங்களிலேயே மோசமானது என்றும், லினக்சில் ஆப்டிமசை பயன்படுத்த உதவ மறுப்பதற்காகவும், மற்ற விஷயங்களுக்காகவும் லினஸ் என்வீடியாவை தாக்கியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் அறிக்கை சுருக்கமாக, அவர்களது தனிவுரிமை இயக்கியை லினக்ஸ் பயன்படுத்துவதை எப்போதும் ஆதரிப்பதாகவும், அந்த இயக்கி பல்வேறு இயங்குதளங்களுக்கும் ஒரே மாதிரியானது என்பதால், உடனுக்குடன் முழுமையான ஓப்பன் ஜிஎல் செயல்படுத்தலுடன் லினக்ஸில் ஆதரவு அளிப்பதை அது உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளது. டேக்ராவுக்கு ஏஆர்ம் லினக்சில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், லினக்சில் பல வகையான கணினிகளில் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகவும் சொல்கிறார்கள். லினக்சில் ஆப்டிமஸ் பயன்பாட்டுக்கு இன்னும் சிறப்பான உதவி தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காததோடு, நோவோ குழுவினருக்கு தொழில் நுட்ப உதவி வழங்குவதையும் குறிப்பிடாவிட்டாலும், 'எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பலவகையான இயங்குதளங்களிலும் ஒரே மாதிரியான ஜிபியு அனுபவத்தை வழங்குவதுதான் எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது' என்று நமக்கு உறுதி அளிக்கிறது என்வீடியா.
இது தொடர்பான விவாதம்.
(இந்தச் செய்திகள் ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக