ஆங்கிலம் தெரிந்த படித்த ஒருவர் கணினி வாங்கி, தனது தமிழ் பற்றைக் காட்ட, தமிழ் தாகத்தைத் தணித்துக் கொள்ள எழுத்துருக்களையும் (fonts), உள்ளீட்டு கருவிகளையும் (input tools), இடைமுகங்களையும் (interfaces) தனது கருவியில் நிறுவிக் கொண்டு மகிழ்வதற்கு இதுவரை செய்த தன்னார்வலர் பணிகள் வழி வகுத்திருக்கின்றன.
ஆங்கில புலமை இல்லாத தமிழ மட்டுமே பேச, எழுத, படிக்க முடியும் ஒருவர் தனது தொழிலுக்காக, வணிகத்துக்காக, பிற பணிகளுக்காக கணினி வாங்கத் துணியும் அளவுக்குக் கருவிகள் இல்லை.
கடைக்குப் போய் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கணினி வாங்கினால்
- நமக்குப் புரிந்த மொழியில் படிக்கலாம்
- கருவிகளை இயக்கிப் பாட்டுக் கேட்கலாம்,
- இணையத்தில் இணைந்து படம் பார்க்கலாம்,
- உலகின் மூலைகளில் எல்லாம் உள்ள தமிழ் மக்களுடன் கருத்துப் பரிமாறலாம்,
- பொருளாதாரப் பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம்
என்று வருவதற்கு இன்னும் கொஞ்சம் வேலை மீதியிருக்கிறது.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
- மேசை இடைமுகங்கள் கேடீயி, ஜினோம், வலை உலாவி மோசில்லா, அலுவலக மென்பொருள் ஓப்பன் ஆபிசு, லினக்சு பொதிகள் ஃபெடோரா, சுசே, உபுண்டு போன்றவற்றின் இடைமுகங்களை தமிழுக்கு மாற்ற தொடர்ந்து பணி நடக்க வேண்டும்.
ஏற்கனவே தேவையான திட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில தன்னார்வலர்களால் அவர்களால் முடிந்த வேலை நடந்து வருகிறது. இன்னும் பல கைகள் தேவை. - கணினி பயன்படுத்துவது, அதன் பயன்பாடுகள் குறித்த தரமான, எளிதாகப் புரியும் வண்ணம் கையேடுகள், உதவிக் குறிப்புகள், புத்தகங்கள் மாணவர்களுக்குப் பாடப் புத்தகமாக இல்லாமல், பயனருக்கு என்று தமிழில் எழுதப்பட வேண்டும்.
நல்ல எழுதும் திறமை படைத்தவர்கள், தொழில் நுட்பப் புலமையும் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய முடிகிற வேலை. - இப்படி மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கும் லினக்சு பொதிகளைக் கணினியில் நிறுவி பரவலாக விற்பனை செய்து, விற்பனைக்குப் பிறகான சேவை வழங்க தொழில் முனைவர்கள். கச்சிதமான திட்டமிடலும், திறமான மேலாண்டமை திறமையும் கொண்டவர்களால் மட்டுமே முடிவது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக