- நான் லினக்சு பயன்படுத்துவதில்லையே!
- எனக்கு தொழில் நுட்பம் தெரியாதே!
- இதற்கு சிறப்புக் கருவிகள் தேவைப்படுமோ?
- பிற வேலைகளுக்கிடையே நேரம் இருக்காதே!
ஒருங்குறி (unicode) எழுத்துருக்கள் நிறுவப்பட்டு, தமிழில் தட்டச்சிட முடியும் கணினி பயன்படுத்துபவர் யாரும் இந்தப் பணியில் சேர்ந்து கொள்ளலாம்.
உங்கள் விருப்பப்படி வசதிப் படி, வாரத்துக்கு ஒரு மணி நேரம் செலவளித்தால் கூட போதும்.
உங்களுக்குப் பிடித்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஆர்வத்தைத் தெரிவித்தால், ஒரு உரைக்கோப்பு (text file) அனுப்பி வைப்பார்கள்.
அதை poedit என்ற உரைத் தொகுப்பியைப் (text editor) பயன்படுத்தி விண்டோசு கணினிகளிலும், KBabel என்ற மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி லினக்சு கணினிகளிலும் மொழி பெயர்க்கலாம்.
சாளரத்தின் மேற்பகுதியில் ஆங்கில சொல் வரும், கீழ் பகுதியில் தமிழ்ச் சொல்லை உள்ளிட்டால் வேலை முடிந்தது.
இது போல ஒவ்வொரு கோப்பிலும் நூற்றுக் கணக்கான சொற்றொடர்கள் இருக்கலாம். முடிந்தவற்றை மொழி மாற்றி கோப்பை சேமித்து ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி விட்டால்
- உங்கள் பங்களிப்பு ஆரம்பித்து விட்டது
- உங்களால் மொழி மாற்றம் செய்யப்பட்ட சொற்கள் பல்லாயிரக் கணக்கான கணினிகளுக்குப் போய்ச் சேர்ந்து பயன்படுத்தப்படும்.
- மொழிபெயர்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் சேர்ந்து கொள்ளும்.
- சில கோடி தமிழர்களுக்கு கணினி உலகிற்கான பலகணியைத் திறக்கும்முயற்சியில் உங்கள் கையும் சேர்ந்து விட்டது.
யாரைத் தொடர்பு கொள்வது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக