ஆனால், மென்பொருளை உருவாக்கிய பிறகு எப்படி அதை நடைமுறைப்படுத்துவது என்பதில் சுணக்கங்கள். முன் அனுபவம் இல்லாததால் 'மென்பொருளை நிறுவிப் பயன்படுத்த வைத்து பலன் வருவது வரை எங்கள் பொறுப்பு அதற்கு இத்தனை ஆயிரம் ரூபாய்கள்' என்று பேசியதில், முடியவே செய்யாத பொறுப்புகளை எடுக்க வேண்டி வந்தது.
அப்படி இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்ததில் மென்பொருள் ஒரு விற்பனைப் பொருளாக முழுமை அடைந்தது. கிட்டத்தட்ட 20 நிறுவனங்களில் நிறுவிச் செய்து கொடுத்ததலில் பல நுணுக்கங்கள் இடம் பெற்று விட்டன.
இனிமேல்
- செய்யும் வேலைக்கு சரியாக காசு வாங்கி,வேலை செய்யும் ஊழியருக்கு மென்பொருள் துறையில் பொதுவாக கிடைக்கும் அளவுக்கு ஊதியம் வழங்கி சேவை அளிக்க வேண்டும்.
- அதற்கு வாடிக்கையாளரை எப்படி அணுக வேண்டும் என்று அலசி,
- இதைச் செய்தால் இவ்வளவு ஆதாயம் கிடைக்கலாம். அதைச் செய்ய எங்களுக்கு இவ்வளவு செலவாகும் என்று பேச ஆரம்பித்ததும்
இந்த எல்லா மாற்றங்களுக்கிடையேயும்,
- நிறுவனங்களை இணைத்து தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க வேண்டும்,
- வீணான நேர விரயங்களைத் தவிர்த்தல்
- ஒரே விபரத்தைத் திரும்பத் திரும்ப உள்ளிடுவதால் வரும் தவறுகளை தவிர்த்தல்,
- எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்டவர்கள் விபரங்களைப் பார்க்கும் வசதி
இடைமுகம் பல மொழிகளிலும் மாற்றும் வசதி இருக்க வேண்டும் என்பதையும் செயல்படுத்திக் கொண்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக