சனி, 28 ஆகஸ்ட், 2010

தமிழில் இணையப் பயன்பாடுகள்

இப்போதைய பயன்பாடுகள்

  1. தமிழ்மணம், தமிழிஷ் இரண்டும் தமிழுக்காகவே இணையத்தில் உருவாகி பயன்படுத்தப்படுகின்றன.
  2. 1990களில் மன்றமையம் என்ற forumhub தமிழ் விவாதங்களுக்குப் பயன்பட்டது
  3. மதுரைத் திட்டம் என்று தமிழ் மின்னூல் திட்டம் web 2.0 நாட்களிலும் web 0.5 வடிவத்திலேயே செயல்பட்டு வருகிறது.
  4. யாஹூ, கூகுள் மடற்குழு சேவைகளைப் பயன்படுத்தி தமிழ் மடற்குழுக்கள் இயங்குகின்றன.
  5. தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள், இணைய இதழ்கள் பல செயல்படுகின்றன.
  6. தமிழ் நூலகம் (சென்னை நூலகம்), புத்தக விற்பனைத் தளங்கள் சில இருக்கின்றன.
  7. கூகுளில் தமிழ் இணையத் தளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது
  8. http://thevaaram.org/ 
    http://www.noolaham.net
    தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியும் கருதத் தக்கது.

ஆங்கிலத்தில் பயன்படும் ஆனால் தமிழில் இன்னமும் இல்லாத பயன்பாடுகள்

  1. அமேசான் போன்ற பொதுவான விற்பனைத் தளம்
  2. ஃபேஸ்புக் அல்லது லிங்க்ட்இன் அல்லது ஆர்குட் போன்று உறவுகளை வளர்க்க உதவும் பயன்பாடுகள். இப்போது இருப்பதை தமிழர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழர் சமூகத்துக்குப் பொருத்தமாக உருவாக்கினால்?
  3. செய்தி விவாதத் தளங்கள் - slashdot.org போல
  4. திசை காட்டும் சேவைகள் - google maps போல?
  5. ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றச் சேவை - google voice போல?

தமிழ் சமூக வளர்ச்சிக்கு என்று தனியாக உருவாக்கும் சாத்தியங்கள்

  1. ஐந்திணைகள் சார்ந்து நிலவரைபடம் உருவாக்குதல்
  2. தமிழக வரலாற்றைத் தொகுக்கும் ஒரு விக்கி பயன்பாடு. இதில் தமிழ் அறிந்தவர்கள் எளிதில் பயன்படுத்தும்படியான இடைமுகம் இருக்க வேண்டும்.

இன்னும் நமது கலாச்சாரத்தை மட்டும் சார்ந்த பயன்பாடுகள் நாம்தான் உருவாக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதற்கு ஆர்வமே இருக்காது.

8 கருத்துகள்:

ராஜ்குமார் ரவி சொன்னது…

//திசை காட்டும் சேவைகள் - google maps போல?
சார் இதெல்லாம் கொஞ்சம்கூட நல்லாயில்ல. அதுமாதிரி தமிழில் உருவாக்கனும்னு சொல்ல வர்ரீங்களா? எந்த மொழியிலும் மென்கலங்களுக்கு இருக்கும் சேவையை பயன்படுத்தினாலே போதுமானது. எடுத்துகாட்டிற்கு திருவான்மியூரிலிருந்து தாம்பரத்திற்கு மென்கலத்திடம் தமிழில் வழி கேட்டாலே கூகிள் வரைபடம் மூலம் தெளிவான விவரங்கள் வருவதுபோல வடிவமைக்கலாம்.

மா சிவகுமார் சொன்னது…

ராஜ்குமார்,

நீங்கள் சொல்வது போல தமிழில் வழி கேட்டால் கூகிள் வரைபடம் மூலம் தெரிவது போல வடிவமைக்கலாம். அதற்கு தமிழ்நாட்டு தரை விபரங்கள் இன்னும் பல மடங்கு திரட்டப்பட்டு தொகுக்கப்பட வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்

ராஜ்குமார் ரவி சொன்னது…

முதலில் சென்னையிலிருக்கும் பேருந்துத் தடங்கள் குறித்த உதவி மென்பொருள் உருவாக்க முனையலாம்.

கல்வெட்டு சொன்னது…

//அதற்கு தமிழ்நாட்டு தரை விபரங்கள் இன்னும் பல மடங்கு திரட்டப்பட்டு தொகுக்கப்பட வேண்டும்.//

சிவா,
இது பேராசை. :-)))))

கூகுள் மேப் அமெரிக்க,கனடா அய்ரோப்பியா நாடுகளில் சாத்தியமானதிற்கு காரணம் அங்கே ஏற்கனெவே இருந்த உள்கட்டமைப்பு. அதாவது ஏற்கனவே மிகத்துல்லியமாக அடையாளமிடப்பட்ட வீடுகள்,தெருக்கள்,உள்ளூர் சாலைகள், நகரச்சாலைகள், நெடுங்சாலைகள் என்று..எல்லாம் ஏற்கனவே இருந்ததை சாப்ட்வேர் தகவலாக மாற்றியுள்ளார்கள்.

கூகுள் செய்தது இருக்கும் தகவலை பயன்படுத்திக் கொண்டது மட்டுமே.

தமிழகத்தில் உங்கள் வீட்டிற்கும் என் வீட்டிற்கும் இருக்கும் இடத்தில் ஆட்சிக்கு ஏற்ப கைமாரி 1008 குடிசைகளும் 100 ரோடுகளும் முளைக்கலாம அழியலாம். இதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் வீட்டு முகவரி இதுவரை பல முறைமாறியுள்ளது. பாஸ்போர்ட்டில் ஒன்று ரேசன் கார்டில் ஒன்று பான் கார்டில் ஒன்று என்று ஒவ்வொரு இடத்திலும் இரு தகவல்.

கட்டமைப்பைச் சரிசெய்தால் மட்டுமே அதை சாப்ட்வேராக மாற்றமுடியும்.
நமக்கு இறங்கி டீக்கடையில் கேட்டுச் செல்லும் வாய்வழி மேப்பே சிறந்தது.

பெயரில்லா சொன்னது…

"அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதற்கு ஆர்வமே இருக்காது." உண்மைதான் ;-)

கல்வெட்டு,

சரியா சொன்னீங்க. அடிக்கடி ஊர் பேரையே மாத்திடுவோமே. அதுவும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா வேற சொல்லுவோம். ஊட்டி, உதக மண்டலம், உதகை மற்றும் மயிலாடுதுறை, மயிலை என்று கண்டபடி பேரை வெச்சுக்குவோம். நம்மாளுக சிங்கப்பூரையே சிங்கப்பூர், சிங்கை, சிங்க புரம் அப்படின்னு அவனவன் அறிவு நீட்சிக்கு தகுந்த மாதிரி அடிச்சு விடுவோம். ஒவ்வொன்னுக்கும் "அறிவு" பூர்வமா வெளக்கம் வேற கொடுப்போம்.

rajamelaiyur சொன்னது…

அனைத்தும் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும்

rajamelaiyur சொன்னது…

நல்ல பதிவு

rajamelaiyur சொன்னது…

தமிழ்மணம் 1

கருத்துரையிடுக