கிழக்குப் பதிப்பகத்தின் வேலைகளில் பயன்படுவதற்காக தமிழ் உள்ளீட்டுக் கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். நாகராஜன் அதற்கான நிரல் உருவாக்கம் செய்திருக்கிறார்.
- பயன்பாட்டின் அளவு,
- பயன்படுத்தும் போது சிக்கல்கள் வராமலிருத்தல்,
- பல எழுத்துருக்கள், உள்ளீட்டு முறைகளுக்கான ஆதரவு,
- பல மொழிகளுக்கும் எளிதாக விரிவுபடுத்துதல்
அருமையான ஒரு மென்பொருள் செயலியாக உருவெடுத்திருக்கிறது.
- எண்ணூற்றிச் சொச்சம் KBக்கள் அளவில்,
- சில நிமிடங்களில் நிறுவுதலும்,
- சில விநாடிகளில் ஆரம்பித்தலும்
- கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பயன்பாடு.
- செயலியின் நிரல்களையும் தரவுகளையும் தனித்தனியாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நூற்றுக் கணக்கான உள்ளீட்டு முறைகளை வைத்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் 9 உள்ளீட்டு முறைகளை சேர்த்து செயலியை இயக்கலாம். மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்களான மகேசன், நந்தா போன்றவர்கள் நல்ல ஆழமான கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றனர்.
இதை இணையத்தின் மூலம் இலவசமாக தகவிறக்கிக் கொள்ள தரப் போகிறார்கள். இணைய வசதி இல்லாதவர்களுக்கு குறுந்தகட்டில் 25 ரூபாய்களுக்கு கிடைக்கும். நகல் செய்வதிலும், மற்றவர்களுக்கு கொடுப்பதிலோ எந்தத் கட்டும் கிடையாது, இணைக்கும் மென்பொருள் தொகுப்புகளின் நிரல் அவர்களின் உரிமைப் பொருளாக இல்லாததால், விண்டோசுக்கான செயலியின் மூல நிரலை திறவூற்றாகத் தர முடியாதாம்.
டெல்பி என்ற நிரல் மொழியில் எழுதியிருக்கிறார்கள். அதே நிரலையும் வடிவமைப்பையும் திறவூற்று முறையில் வெளியிட்டு லினக்சுக்கும் பயன்படுத்தச் செய்யத் திட்டமிருக்கிறதாம்.
ஒரு பொருளை/ சேவையை உருவாக்கும் போது உலகளாவிய அளவில் பயன்படும்படி உருவாக்குவதுதான் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஒரே வழி. இந்தச் செயலி உலகின் எந்த மொழிக்கும் உள்ளீட்டு முறை உருவாக்கப் பயன்படக் கூடியது. தமிழகத்திலிருந்து உலகுக்கு போகும் ஒரு உயர்தர பங்களிப்பு. கிழக்கு பதிப்பகத்துக்கும், நாகராஜூக்கும், பத்ரிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த செயலிக்கு நல்ல தமிழ் பெயர் ஒன்று சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக