இதற்கான வழிமுறைகள்:- இடைமுக வடிவம்
- வாடிக்கையாளர் நிறுவனப் பெயர் (company name)
- அவர்களது முகவரி, (address)
- அவர்களிடம் பணம் வாங்கும் முறைமை (payment term)
- பொருளை அனுப்பும் முறைமை (shipment term)
- பொருளை அனுப்பும் வழி, (shipment mode)
- சேர வேண்டிய துறைமுகம் (port of destination)
- தேவை நாள், (order date)
- வந்து சேர்ந்த விபரம் (order reference)
அடுத்ததாக அவர்கள் வாங்கப் போகும் பொருளின் விபரங்களை உள் வாங்க வேண்டும்.
- பொருளின் பெயர் (தோல் வகையின் பெயர்),
- அதன் பண்புகள் (நிறம், தடிமன், அளவு, தரம்),
- எவ்வளவு சதுர அடி வேண்டும்,
- என்ன விலை,
- என்றைக்கு அனுப்பி வைக்க வேண்டும்,
- இது போக தரக் கட்டுப்பாட்டுக் குறிப்புகள்,
- முன்மாதிரி அனுப்பும் தேவை குறித்த குறிப்புகள்
ஒரு பக்கத்தின் மேற்பகுதியில் பொதுவான வணிக விபரங்களையும், கீழ்ப்பகுதியில் ஏழெட்டு பொருள் விபரங்களை உள்ளிடும் வசதியும் கொடுக்க வேண்டும்.
- விபரங்களை உள்ளிட்டு சேமித்த பிறகு, உறுதிப்படுத்தலாக விபரங்களை வெளியிலெடுத்துக் காண்பிக்க ஒரு அறிக்கை
- இதுவரை உள்ளிட்டு இன்னும் பொருள் அனுப்பி வைக்கப்படாத தேவைகளைப் பார்க்க ஒரு அறிக்கை,
- இது வரை வந்த எல்லா தேவைகளின் விபரங்களைப் பார்க்க ஒரு அறிக்கை,
- இது வரை வந்து பொருள் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்ட தேவைகளின் விபரங்கள்
இதுதான் தேவையான மென்பொருளின் வடிவம்.
இதற்கான படிவங்களை உருவாக்கி, அறிக்கைகளின் படம் போட்டு பயன்படுத்தப் போகும் வாடிக்கையாளரிடம் காண்பித்தால் அவர் தனது கருத்துக்களைச் சொல்லலாம். அதன் அடிப்படையில் தேவையான மாறுதல்களைச் செய்த பிறகு, நுட்ப விபர ஆவணம் எழுத ஆரம்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக