வேலூரில் மென்பொருள் துறை நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் - கருத்தரங்கு
நாள் - செப்டம்பர் 4, 2010
நேரம் - மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் - வேலூர் கோட்டை மைதானம், நூலாறு புத்தகக் கண்காட்சியின் பகுதியாக
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கோட்டைகளான பெங்களூருவுக்கும் சென்னைக்கும் நடுவில் இருக்கும் வேலூர் மாவட்டத்தில் மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுவதற்கான ஆதாயங்கள் இருக்கின்றன.
மாவட்டத் தலைநகராக, ஒரு சிறுநகராக கருதப்பட்டு வரும் வேலூரில் என்னென்ன மாற்றங்கள் வர வேண்டும், அரசாங்கம் என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்பது விவாதிக்கப்பட வேண்டும்.
வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கருத்து என்ன, இங்கு இருக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நோக்கங்கள் என்ன?
சென்னை அல்லது பெங்களூருவில் செயல்படும் மென்பொருள் நிறுவனம் ஒன்று வேலூரில் மென்பொருள் உருவாக்க மையம் ஏற்படுத்த வேண்டுமானால் என்னென்ன எதிர்பார்ப்பார்கள்?
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான தகவல் தொழில் நுட்பத் தேவைகள் இருக்கின்றன?
இவற்றை விவாதித்து ஒரு செயல்திட்டம் வகுக்கும் நோக்கத்தில்
1. வேலூர் மாவட்டத்தில் கிடைக்கும் மனிதவளம் பற்றிய தகவல்கள் - மாவட்டத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி பிரதிநிதி
2. வேலூரில் நிறுவனக் கிளை ஏற்படுத்தத் தேவைப்படும் வசதிகள் - சென்னை/பெங்களூருவில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனப் பிரதிநிதி
3. வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்கி நடத்தும் நடைமுறைச் சாத்தியங்கள் - வேலூரில் செயல்படும் சிறு நிறுவன பிரிதிநிதி
4. வேலூர் மாவட்ட நிர்வாகம் மென்பொருள் நிறுவனங்களுக்கு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய முடியும் - மாவட்ட நிர்வாகப் பிரதிநிதி
5. வேலூரைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத் தேவைகள் - வேலூரைச் சார்ந்த வணிக /தொழில் நிறுவனப் பிரதிநிதி
6. தகவல் தொழில்நுட்பச் சூழலை உருவாக்குவதற்கான தேவைகள் - தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்.
என்று ஆறு பேர் கொண்ட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் நகரின் கல்லூரி மாணவர்கள், வேலூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மாவட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்க விரும்பும் தொழில் முனைவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பலன் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக