1. இணையத்தில் ஏதாவது ஒரு பக்கத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது உலாவியின் மூல நிரலைப் பார்க்கவும் என்ற தேர்வை தேர்ந்தெடுத்தால், அந்தப் பக்கத்தை உருவாக்கிக்காட்டும் மூல நிரலைக் காணலாம்.
(பயர்பாக்சு உலாவியில்
View -> Page Source
அல்லது
ctrl-U)
2. http://www.google.com/ என்ற பக்கத்துக்குப் போய் மூல நிரலைப் பார்க்கவும். அதில் இருக்கும் பல வரிகளில் இவற்றை மட்டும் கவனிக்கவும்:
<html>
<head>
<title> </title>
</head>
<body>
</body>
</html>
- மீஉரைக் கொக்கிகளுக்கு (<html> </html>) நடுவில் பக்கத்தின் உள்ளடக்கம் முழுவதும் தரப்பட்டிருக்கிறது.
- தலைக் கொக்கிகளுக்கு (<head> </head>) இடையே தலைப்பகுதியில் பயன்படுத்த வேண்டிய விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன.
- தலைப்புக் கொக்கிகளுக்கு (<title> </title> ) இடையே பக்கத்தின் தலைப்பு தரப்படுகிறது
- உடற் கொக்கிகளுக்கு (<body> </body> ) இடையே பக்கத்தில் காண்பிக்க வேண்டிய உள்ளடக்கம் தரப்பட்டிருக்கிறது.
- உங்கள் கணினியில் ஒரு உரைத் தொகுப்பியை இயக்குங்கள். விண்டோசு பயன்படுத்திக் கொண்டிருந்தால் நோட்பேட் என்ற பயன்பாடை பயன்படுத்திக் கொள்ளலாம். மைக்ரோசாஃப்டு வேர்டு பயன்படுத்தக் கூடாது.
- மேலே கொடுத்திருக்கும் மீஉரை நிரலை இந்தக் கோப்பில் உள்ளிடுங்கள், உங்களுக்குத் தேவையான விபரங்களைச் சேருங்கள்.
- உங்கள் கோப்பின் உள்ளடக்கம் இப்படி இருக்க வேண்டும்.
<html>
<head>
<title> உண்மைத்தமிழன் </title>
</head>
<body>
உண்மைத்தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..
</body>
</html>
4. இந்தக் கோப்பை சேமிக்க வேண்டும்.
1. File --> Save
2. Save in --> My Documents --> My Website
(My Website என்ற புதிய அடைவை உருவாக்கிக் கொள்ளவும்)
3. File Name --> webpage1.html
4. Files of type --> All files (*.*)
Save.
5. இப்போது பயர்பாக்சில் போய் File --> Open File --> (My Documents/My Website/webpage1.html) என்று தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் உருவாக்கிய வலைத்தளப் பக்கத்தை உங்கள் உலாவி திரையில் இப்போது காட்டும். இதன் நிரல் மூலத்தைப் பார்வையிட்டால், நீங்கள் எழுதியை நிரலைப் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக