சுட்டி
சில மேற்கோள்கள்
- லினக்சு கணினிகளைப் பயன்படுத்துவதில் செலவும் குறைவு நச்சு நிரல்கள் தொல்லையும் இல்லை.
- 6500 பஞ்சாயத்துகளுக்கு இயங்குதள மென்பொருளும், இன்னும் 6,100 லினக்சு இயங்குதளம் நிறுவப்பட்ட கணினிகளும் அனுப்பப்பட்டு விட்டன.
- பள்ளிகளுக்காக 20,000 கணினிகள் வாங்கப் போகிறோம்.
- மைக்ரோசாப்டு ஒரு கணினிக்கு இயங்குதள விலையாக 7000 ரூபாய் கேட்டது. 300 ரூபாய்க்கு எல்லா மென்பொருளும் கிடைக்கும் போது ஏன் இவ்வளவு விலைக்கு இயங்கு தளத்தை மட்டும் நான் வாங்க வேண்டும்.
- ஓப்பன் ஆபிஸ் பயன்பாட்டில் மைக்ரோசாப்டு ஆபிசு கோப்புகளையும் பயன்படுத்த முடியும், odt வடிவ கோப்புகளையும் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்டு ஆபிசில் odt கோப்புகளைப் பயன்படுத்த முடியாது. அப்படி இருக்க மட்டமான மைக்ரோசாப்டு ஆபிசுக்கு அதிகப் பணம் கொடுப்பது என்ன நியாயம்?
- தமிழ் நாடு அரசு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி ரூபாய் மென்பொருள் விலையில் மிச்சப்படுத்த முடியும்.
திருவாரூர் ஆட்சியராக இருந்த போது இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக, மாவட்ட நிர்வாகத்தை கணினி மயமாக்கிய சாதனையை செய்து காட்டிய திரு உமாசங்கருக்கு தலைதாழ்த்தி வணக்கங்கள்.
விவாதத் தளத்தில் உற்சாகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக