பெல் ஆய்வகத்தில் வேலை பார்த்த டென்னிஸ் ரிச்சியும் கென் தாம்சனும் அவரது நண்பரும், மல்டிக்சை கிண்டல் செய்யும் விதம் யுனிக்சு என்று பெயர் சூட்டி தமது படைப்பை வெளியிட்டார்கள்.
யூனிக்ஸ் எதிர்பாராத விதமாக பிரபலமடைந்து வணிக உலகிலும் நுழைந்தது. பெரிய கணினிகள் செய்து விற்கும் நிறுவனங்கள் யுனிக்ஸ் உரிமம் பெற்றுக் கொண்டு தமது கணினியுடன் இயங்குதளத்தை வழங்க ஆரம்பித்தன. பல ஆயிரம் டாலர்கள் கொடுத்து கணினி வாங்கினால் கூடவே இயங்கு தள உரிமமும், அதன் மூல நிரலும் சேர்ந்தே கிடைக்கும்.
பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களும் பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணினி வல்லுநர்களும் மட்டும்தான் இத்தகைய கணினிகளையும் கூட வரும் மென்பொருளையும் பயன்படுத்த முடிந்தது. சின்னக் கணினிகளில் பயன்படுத்த இயங்கு தளம் இல்லை.
1980களின் தொடக்கத்தில் ஐபிஎம்மின் தனிப் பயனர் கணினி வெளியானதும், அதற்கு இயங்கு தளம் எழுதி வழங்கிய மைக்ரோசாப்டு வளர்ந்து ஆதிக்க சக்தியாக உருவானதும் இன்னொரு கதை.
- தனிப் பயனர் கணினிகளுக்கான எம்எஸ் தாஸ் இயங்குதள மென்பொருள் மூலநிரல் இல்லாமல் விற்கப்பட்டது.
- வாங்குபவர்கள் கணினியை இயக்க மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை மாற்றி அமைக்க முடியாது.
- உரிமத்தின் மூலம் அதை நகல் செய்வது, பிறரிடம் பகிர்ந்து கொள்வது போன்ற உரிமைகள் கட்டுப்படுத்தப் பட்டன.
- பள்ளி கல்லூரி மாணவர்கள் மென்பொருளைப் பற்றிக் கற்றுக் கொள்ள மூலநிரலைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது.
- கணினியைப் பயன்படுத்தும் நிறுவனம் பழுது நீக்கவோ புது வசதிகளைச் செய்யவோ மென்பொருளை மாற்றியமைக்க முடியாது.
- ஒரே நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் எல்லோரது தலைவிதியும்.
- யூனிக்சு போன்று மூல நிரலுடன்
- ஆனால் உரிமவிலை கொடுக்கத் தேவையில்லாது
- எல்லோருக்கும் கிடைக்கும்
கணினி மென்பொருள் தொகுப்பை உருவாக்க வேணடும் என்று திட்டமிட்டார்.
அத்தகைய மென்பொருளை பிறருக்குக் கொடுக்கும் போது ஒரு புதுமையான உரிமத்தைப் பயன்படுத்தினார்.
- 'இந்த மென்பொருள் மூல நிரலுடன் உங்களுக்குக் கிடைக்கிறது. இதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மூல நிரலை மாற்றிக் கொள்ளலாம். எத்தனை கணினியில் வேண்டுமானாலும் நகல் செய்து கொள்ளலாம், எந்தத் தடையும் இல்லை'
- 'இன்னும், உங்கள் நண்பர்களுக்கு, அல்லது வணிக முறையில் இதே மென்பொருளை அல்லது மேம்படுத்திய மென்பொருளை பகிர்ந்து கொள்ளலாம்.
- ஒரே ஒரு நிபந்தனை. மற்றவர்களிடம் இந்த மென்பொருளையோ இதை மேம்படுத்தி உருவாக்கிய மென்பொருளையோ வினியோகிக்கும் போது, உங்களுக்கு என்னென்ன உரிமைகள் கிடைத்தனவோ அதே உரிமைகள் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்'.
'அதாவது, அவர்களுக்கும் மூல நிரலும் அதை மாற்றி அமைக்கும் உரிமையும் கொடுக்கப்பட வேண்டும். கூடுதலாக எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது'
1991ல் தனக்குப் பரிசாகக் கிடைத்த இன்டெல் 386 வகைக் கணினியில் பயன்படுத்த இயங்கு தள மென்பொருளை தானே எழுதிக் கொண்டார், அப்போது ஹெல்சிங்கி பல்கலைக் கழகத்தில் முது கலை கணினிவியல் பயின்று கொண்டிருந்த லினஸ் டோர்வால்ட்ஸ்.
அதற்கு லினக்சு என்று பெயர் சூட்டி GPL உரிமத்துடன் இணையத்தில் வெளியிட்டார். அந்த உரிமம் கொடுத்த உரிமைகள், கடமைகளுடன் உலகின் பல பகுதிகளிலிருந்து கலந்து கொள்ளும் பல்லாயிரக் கணக்கான கணினி வல்லுநர்களின் கூட்டு முயற்சியால் லினக்சு பதினைந்து ஆண்டுகளில் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக